செய்திகள்

கொரோனா எனக்கு வராது… சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வெளியிட்ட காரணம்!

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தாவை, கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது.

ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்.’ என்றுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top