செய்திகள்

ஒரு குட்டி கத பாடலில் விஜய் ஓட்டிய கார் மாடல் இதுதான்

விஜய் ஓட்டிய கார் மாடல்

அண்மையில் கார்டூன் வடிவில் வெளியிடப்பட்ட மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கத’ லிரிக் வீடியோ மூலம், அப்படம் முழுக்க நடிகர் விஜய் பயன்படுத்தும் கார் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

நகரம் மற்றும் கைதி படங்களில் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘மாஸ்டர்’ தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக வெளியான படத்தின் இரண்டு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து பிப்ரவரி 14ம் தேதி ’மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி இருந்தது

ஒரு குட்டி கத என்ற பெயரில் உருவாகி இருந்த பாடலுக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். தனது சொந்த குரலில் நடிகர் விஜய் இப்பாடலை பாடி இருந்தார்.

இந்த பாடலுக்காக லிரிக் வீடியோ முழுவதும் கார்டூன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.குறிப்பாக வீடியோவில் இடம்பெற்றிருந்த நடிகர் விஜய்யின் கார்டூன் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
இந்நிலையில், விஜய் ஒரு காரை ஓட்டுவது போன்ற கார்டூன் காட்சி அந்த லிரிக் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அது என்ன கார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் உருவான நிலையில், தற்போது அந்த வாகனம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன . லிரிக் வீடியோ விஜய்யின் கார்ட்டூன் ஓட்டும் கார் மாருதி நிறுவனத்தின் மாடலாகும்.

எனினும், அது என்ன மாடல் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும் ‘மாஸ்டர்’ படம் முழுக்க விஜய் அந்த காரில் தான் வலம் வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே அந்த கார் என்ன மாடல் என்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top