செய்திகள்

அறுவடையைக் கொண்டாட நிர்வாணம்.. தள்ளுமுள்ளு.. களை கட்டிய விழா

அறுவடையைக் கொண்டாட

ஜப்பானில் அறுவடையை கொண்டாடும் வகையில் விவசாயிகளின் நிர்வாண திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் அறுவடையை அவர்களது வழக்கப்படி வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஜப்பானில் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை விவசாயிகள், ‘ஹடாகா மஸ்துாரி’ என்ற பெயரில் கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, ஹோன்சு தீவில் உள்ள சைதாய்ஜி கனோனின் கோவிலில் விவசாயிகள் நிர்வாணத் திருவிழாவாக அறுவடையைக் கொண்டாடுவர்.

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விழாவில், கடும் குளிரையும் பொருட்படுத்தாது மிகவும் குறைந்த உடையுடன், காலில் ஷாக்ஸ் அணிந்து விவசாயிகள் கலந்து கொள்வார்கள்.

இளைஞர்களிடம் விவசாயம் பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

வழக்கம் போல இந்தாண்டிற்கான நிர்வாணத் திருவிழா கடந்த வாரம் ஹோன்சு தீவில் நடைபெற்றது.

இந்த விழாவின் ஒரு அம்சமாக கோவிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்க, இரண்டு அதிர்ஷ்ட குச்சிகளுடன் சேர்த்து சுமார் நூறு மரக்குச்சிகள் வீசப்பட்டன.

அந்த அதிர்ஷ்ட குச்சிகளை பெறுவதற்கு விவசாயிகள் இடையே போட்டி இருந்தது. அது யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுவர்.

எனவே அதிர்ஷ்டக்குச்சிகளை அடைய அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தத் திருவிழாவில் ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து வந்தும் ஆண்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top