செய்திகள்

பெற்ற தாயையே வன்கொடுமை செய்த கொடூர மகன்!

மாமனார், பெற்ற தாயையே

பெற்ற தாயையே வன்கொடுமை செய்த கொடூர மகன்!

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் பெண்மணி ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் சமீபத்தில் காவல்நிலையத்தில் அளித்த புகார் காவல்துறையினரையே அதிர்ச்சியடைய செய்தது.

அதில், தனது மகன் தன்னை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ‘எனது கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகன் குடிப்பதற்கு என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார். பணம் தர மறுத்தால் அடித்து துன்புறுத்துவார். எனக்கு மேலும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் என்னை பாலியல் ரீதியாக பலமுறை துன்புறுத்தியுள்ளான். இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்வதாக மிரட்டினான்’ என்று புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP HITS

To Top