செய்திகள்

‘சசிகலா வெளியே வரணும்’… நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ரகளை

நடுரோட்டில் பட்டாக்கத்தி, சசிகலா, Sasikala News, karur viral video, karur man viral video

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் கையில் ஆயுதங்களுடன் நடு ரோட்டில் நின்று வாகனங்களை செல்ல விடாமல் தடுத்துள்ளார். மேலும் அவர் சிறையிலிருக்கும் சசிகலாவை உடனே விடுதலை செய்யுமாறு கத்தினார்.

இதனை வேடிக்கை பார்த்தவாறு பொதுமக்களும், வாகனங்களில் வந்தவர்களும் அப்படியே நின்று விட்டனர். 20 நிமிடமாக ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பட்டாக்கத்தியை ரோட்டில் வைத்து தேய்த்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதனை வீடியோ எடுத்த பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் அப்போது இல்லாததால் அந்த வாலிபரை கட்டுப்படுத்த இயலவில்லை.

ஒரு கட்டத்தில் ரகளை செய்த வாலிபரை அவரது சகோதரர் அங்கு வந்து அவரை இழுத்து சென்றார். மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த வாலிபர் சசிகலாவை விடுதலை செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்தது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுயள்ளது.

20 நிமிடத்துக்கும் மேலாக சட்ட விரோத செடலில் ஈடுபட்ட அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் கிருஷ்ணராயபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மன நல குன்றியவர் எனவும் சில தகவல் கூறுகிறது. ஆனால் அவரை பார்ப்பதற்கு அவ்வாறு தெரியவில்லை. மன நிலை சரியில்லாத ஒருவர் சசிகலா சிறையிலிருப்பது எப்படி அறிந்திருக்க முடியும் என இந்த வீடியோ மீது விமர்சனங்கள் எழுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP HITS

To Top